தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓய்வூதிய பலன், பதவி உயர்வு அளிக்க பல்கலை அலுவலர்கள் வலியுறுத்தல்

ஓய்வூதிய பலன், பதவி உயர்வு அளிக்க பல்கலை அலுவலர்கள் வலியுறுத்தல்

ஓய்வூதிய பலன், பதவி உயர்வு அளிக்க பல்கலை அலுவலர்கள் வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பலன், பதவி உயர்வு வழங்க கன்வீனர் கமிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்க தலைவர் முருகன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் முத்தையா தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலை விதிப்படி 2018 முன் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு சம்பள நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு அரசு ஊழியருக்கான சம்பள நிர்ணயம் மேற்கொள்ள வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, 2018க்கு பின் பணி நியமனமானவர்களுக்கு இம்முறை பின்பற்றலாம். அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என 2018 ல் சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது.இதே பிரச்னை 2021ல் கிளம்பியபோது 2018 சிண்டிகேட் முடிவை பின்பற்றி 2021ல் செனட் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் சம்பள மறுநிர்ணயம் முயற்சிகளை அதிகாரிகள் தொடர்கின்றனர். இதே பிரச்னை தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை அலுவலர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், பல்கலை சட்டவிதியை பின்பற்ற வேண்டும். சம்பள மறுநிர்ணயம் செய்யக் கூடாது.ஆட்சேபணை தெரிவிக்க உள்ளாட்சி தணிக்கை அலுவலர்களுக்கு அதிகாரமில்லை. சம்பள மறுநிர்ணயம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசு கடிதம் (எண்:174/15.9.2023) ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை பின்பற்றி மதுரை காமராஜ் பல்கலையிலும் ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக பணப் பலன்களை பெற முடியாமல் தவிக்கும் அலுவலர்களுக்கு உடன் வழங்கவும், உதவியாளர், உதவி பதிவாளர், துணை பதிவாளர் பதவி உயர்வு வழங்க அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us