UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 04:52 PM
திண்டுக்கல்:
திண்டிவனம் தர்மசாண்ட் ஜெயின் பள்ளியில் மாநில அளவிலான 20 வது சப்ஜூனியர், ஜூனியர், யூத் பிரிவுக்கான வூசு போட்டிகள் நடந்தது.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 650க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் சார்பாக பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் 28மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 9 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்றனர்.முதல் இரு இடங்களை பிடித்த ஜூனியர் பிரிவு மாணவர்கள் யஷ்வந்த் சஞ்சய், ஜீவா, ஸ்ரீ அடுத்த மாதம் 6 முதல் 11 வரை பீகாரில் நடைபெறும் 22 வது தேசிய ஜூனியர் போட்டிகளில் பங்கேற்பர்.சப் ஜூனியர் பிரிவில் முதல் இரு இடங்களை வென்ற மாணவிகள் ரேஷ்மி, கங்காவர்ஷினி, தீரா சண்டிகரில் நடைபெறும் 23வது தேசிய வூசு போட்டிகளில் பங்கேற்பர். வெற்றி பெற்ற மாணவர்களை அமைச்சர் பெரியசாமி வாழ்த்தினார்.
