தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும்: துணை வேந்தர்

வேளாண் பல்கலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும்: துணை வேந்தர்

வேளாண் பல்கலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும்: துணை வேந்தர்


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பாமல் இழுத்தடிப்பதால், காலிப்பணியிடம், 650 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிருப்தி எழுந்துள்ளது. வேளாண் கல்வி நிறுவனங்கள் அனைத்தும், கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 16 வேளாண் அறிவியல் மையங்கள், 44 ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படுகின்றன.இதற்கான நிரந்தர பணியிடங்கள், 1,450 ஆக இருந்த நிலையில், 2014 ஜூலை மாதத்துக்கு பின் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் பணியிடம் நிரப்பப்படாமல் விடப்பட்டுள்ளன. இதனால், காலிப்பணியிடம் 650 ஆக தற்போது அதிகரித்துள்ளது. இதற்கிடையில், புதிதாக அறிவிக்கப்பட்ட நான்கு வேளாண் பல்கலைக்கு போதிய இடம், ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டதால், மாணவர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.புதிய கல்லுாரிகள் திறக்க, குறைந்தபட்சம் 110 ஏக்கர் நிலம், 45 ஆசிரியர்கள், ஆய்வகம், நுாலக உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை. ஆனால், இடம் தேர்வு செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்யாமல் புதிய கல்லுாரிகள், தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு நெருக்கடி பல்கலை நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. புதிய கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் தற்போது, கோவை, மதுரை கல்லுாரிகளுக்கு பிரித்து மாற்றப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, போர்கால அடிப்படையில், புதிதாக அறிவிக்கப்பட்ட கல்லுாரிகளுக்கு உரிய நிலம் ஒதுக்கி, ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தவிர, பல்கலையில் காலியாகவுள்ள, 650 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:
புதுக்கோட்டை, செட்டிநாடு வேளாண் கல்லுாரிக்கு நிலம் உள்ளது. நபார்டு வாயிலாக நிதி பெறப்பட்டு ஒப்பந்தம் கட்டுமான பணிக்கு விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஜீனுார் கல்லுாரியில் மாநில தோட்டக்கலைக்கான இடம் வழங்கியுள்ளனர்; அதற்கு கட்டடம் கட்ட நபார்டுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். கரூரில் நிலம் குறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளோம். நாகை கல்லுாரியிலும் ஒரு நிலம் தேர்வு செயயப்பட்டுள்ளது. உறுதி செய்ய பணிகள் நடக்கின்றன. புதிய கல்லுாரிகளுக்கு சில கட்டடங்கள் வாடகைக்கு எடுத்தும், அரசு கட்டடங்களிலும் வைத்து மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதி வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிர் சாகுபடி சார்ந்த நேரடி களப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதால், தற்காலிகமாக மாற்றியுள்ளோம். மேலும், பல்கலையில் உள்ள காலியிடங்கள் நிரப்பவும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us