தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் கண்காட்சி

போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் கண்காட்சி

போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் கண்காட்சி


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ஆவடியில் உள்ள ஆய்வகமான போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா இயக்கத்தையொட்டி தனது முதன்மைத் தயாரிப்புகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் காட்சிப்படுத்துவதற்காக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை 21 முதல் 23 வரை இக்கண்காட்சி நடக்கிறது.தொடக்க நிகழ்வுக்குத் தலைமை வகித்த கூடுதல் இயக்குனர் (ஆந்திர பிரதேசம்) டாக்டர் பாலமுருகன், பாதுகாப்புச்சூழல் அமைப்பில் தன்னிறைவு அடைவதில் டி.ஆர்.டி.ஓ பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். கூடுதல் இயக்குனரும் (டிஓடி, அகாம் குழு) இணைத் தலைவருமான பன்னீர்செல்வம் பேசுகையில் திட்டத்தின் நோக்கத்தை விளக்கி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் தங்கள் யோசனைகள் மற்றும் பங்களிப்புடன் மாணவர்கள் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குனர் (எம்.பி.டி, அகாம் குழு) ராஜேஷ் குமார் சிறப்புரையாற்றினார். இளம் திறமையாளர்களை வளர்ப்பதற்கு டி.ஆர்.டி.ஓவில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து அவர் விளக்கினார். சி.வி.ஆர்.டி.இ., நிறுவனத்தின் இயக்குனர் பாலமுருகன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்துரையாடல்கள் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us