தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துபாயில் விளையாட்டு போட்டி: பணம் இல்லாமல் ஊனமுற்ற வீரர்கள் அவலம்

துபாயில் விளையாட்டு போட்டி: பணம் இல்லாமல் ஊனமுற்ற வீரர்கள் அவலம்

துபாயில் விளையாட்டு போட்டி: பணம் இல்லாமல் ஊனமுற்ற வீரர்கள் அவலம்


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காவடிபட்டியைச் சேர்ந்த வீராசாமி(33), தொண்டியை சேர்ந்த கருணா(24), பெருங்குளத்தை சேர்ந்த கருணாகரன்(24) ஆகிய மூவருக்கும் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமிழகத்தில் ஊனமுற்றோருக்காக நடைபெற்ற, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, மெடல்கள் வாங்கினர்.

தற்போது, மூன்று பேருக்கும் தமிழக பேரா ஒலிம்பிக் சங்கத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.அதில் ,துபாயில் பிப்.,8 முதல் பிப்.,13 வரை நடைபெறும், உலக அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். போதிய வசதி இல்லாததால் ,இந்தியாவிற்காக மெடல் வாங்கும் கனவு பொய்த்துவிடுமோ என்ற அச்சத்தில் இவர்கள் உள்ளனர். கலெக்டர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் என அனைவரையும் சந்தித்து துபாய் செல்ல உதவுமாறும் கேட்டு வருகின்றனர்.

வீராசாமி கூறியதாவது: நான் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் மற்றும் விவசாயம் படித்துள்ளேன். கடந்த மூன்றாண்டுகளாக விளையாட்டில் ஈடுபட்டுள்ளேன். துபாயில் நடைபெறும் போட்டிகளில் பேட்மிட்டன், வாள் சண்டை,தட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே ஐந்து மாநிலங்களுக்கு இடையே நடந்த போட்டியில் பங்கேற்று மெடல் வாங்கி உள்ளேன். இதுவரை 15 போட்டிகளில் பங்கேற்று ஒன்பது மெடல்களை பெற்றுள்ளேன். துபாயில் நடைபெற உள்ள போட்டியிலும் மெடல் வாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அங்கு செல்ல போதிய பணம் வசதி இல்லாததால் ,விளையாட்டு போட்டியில் பங்கேற்பது கனவாகிவிடுமோ என அச்சமாக உள்ளது.இவ்வாறு வீராசாமி கூறினார். இவர்களுக்கு உதவ நினைப்போர் 99446 44067 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us