தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இசைத் திருவிழா - தோல்பாவை கூத்து பரவசமடைந்த பார்வையாளர்கள்

இசைத் திருவிழா - தோல்பாவை கூத்து பரவசமடைந்த பார்வையாளர்கள்

இசைத் திருவிழா - தோல்பாவை கூத்து பரவசமடைந்த பார்வையாளர்கள்


UPDATED : ஆக 07, 2023 12:00 AM

ADDED : ஆக 07, 2023 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2023 12:00 AM ADDED : ஆக 07, 2023 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சுக்ரதம் அறக்கட்டளை சார்பில், அடையாறு, இந்திரா நகரில் உள்ள இளைஞர்விடுதி வளாகத்தில், இசைத் திருவிழா 2023 என்ற இரு நாள் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.கர்நாடக இசைக் கலைஞர் கன்யாக்குமரி பங்கேற்றார். தொடர்ந்து, ஸ்ரீராமனின் வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பரமபதம், தாயக்கட்டை உள்ளிட்ட, 100 வகையான கிராமிய விளையாட்டு நடந்தது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். மாலை, முத்துசந்திரன் குழுவினரின், ராமாயணத்தில் ஒரு பகுதி சுந்தர காண்டம் என்ற தலைப்பில், தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில், சிறிய திரையில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பின்னணி குரலில் பேசியதை கண்டு, பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ராமாயணத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us