தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணியிடம் காலி சிற்பக்கல்லுாரி அழைப்பு

ஆசிரியர் பணியிடம் காலி சிற்பக்கல்லுாரி அழைப்பு

ஆசிரியர் பணியிடம் காலி சிற்பக்கல்லுாரி அழைப்பு


UPDATED : ஆக 07, 2023 12:00 AM

ADDED : ஆக 07, 2023 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2023 12:00 AM ADDED : ஆக 07, 2023 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்:
மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரியில், கற்சிற்பம், கட்டட கலைகள் பகுதிநேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.மாமல்லபுரத்தில் கலை, பண்பாடு துறையின் கீழ் இக்கல்லுாரி இயங்குகிறது. இங்கு மாணவர்கள் அதிகரிக்கும் நிலையில், பல பாடப்பிரிவுகளில், ஆசிரியர்கள் இன்றி கல்வித்தரம் பாதிக்கிறது. ஆசிரியர்களை நியமிக்க, தொடர்ந்து மாணவர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மரபு கற்சிற்பம், கட்டடக் கலை பிரிவுகளில், 2023 - 24ன், பகுதிநேர, 15,000 ரூபாய் மாத தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பதாக, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இக்கலைகளில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us