பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி
பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 10:24 AM
செஞ்சி:
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லுாரியில் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி, ஸ்ரீரங்கசின்னம்மாள் கல்வியியல் கல்லுாரி பி.எட்., எம்.எட், மாணவர்கள் இதுவரை இறுதித் தேர்வை திண்டிவனம் அரசு கல்லுாரியில் தேர்வு எழுதி வந்தனர். இந்த ஆண்டு முதல் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லுாரியில் தேர்வு எழுதுவதற்கான மையத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. முதன் முறையாக தேர்வு எழுத உள்ள 800 பி.எட்., எம்.எட்., மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி, செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டை வழங்கினர். எம்.எட்., கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ், பி.எட்., முதல்வர்கள் செந்தில்குமார், சசிகுமார் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
