தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் திறமையை பெற்றோர் அங்கீகரிக்க வேண்டும் ஐ.ஐ.டி., இயக்குனர் பேச்சு

மாணவர்களின் திறமையை பெற்றோர் அங்கீகரிக்க வேண்டும் ஐ.ஐ.டி., இயக்குனர் பேச்சு

மாணவர்களின் திறமையை பெற்றோர் அங்கீகரிக்க வேண்டும் ஐ.ஐ.டி., இயக்குனர் பேச்சு


UPDATED : ஆக 13, 2023 12:00 AM

ADDED : ஆக 13, 2023 06:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2023 12:00 AM ADDED : ஆக 13, 2023 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிக் பள்ளியின், 60வது ஆண்டு விழா, இங்குள்ள, சாக் அரங்கில் நடந்தது. இதில், பள்ளி முதல்வர் சதீஷ் குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்று, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:
நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, கல்வி. பெற்றோரும், ஆசிரியரும், மாணவர்களிடம் உள்ள கூடுதல் திறமைகளை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்க வேண்டும். இதன் வாயிலாக, இளம் வயதிலேயே அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களின் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மாணவர்களுக்காக சென்னை ஐ.ஐ.டி., பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதில், மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள், மாணவர்களிடையே படைப்பாற்றலை உருவாக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், கடந்தாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பள்ளியின் நிர்வாக குழு தலைவரும், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருமான தனவேல், செயலர் ராமன் குமார், துணை முதல்வர் பிரின்சி டாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us