தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்ச்சி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

நீட் தேர்ச்சி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

நீட் தேர்ச்சி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?


UPDATED : ஆக 18, 2023 12:00 AM

ADDED : ஆக 18, 2023 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2023 12:00 AM ADDED : ஆக 18, 2023 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
நீட் தேர்வு தேர்ச்சி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் அவர் கூறியதாவது:
மதுரை உள்ளிட்ட நகரங்களில் செப்., 8க்கு பின்னர் சிறுபான்மை பிரிவு சார்பில் அமைதி ஊர்வலம் நடத்த உள்ளோம். மத்திய அரசு சிறுபான்மையினருக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள், தமிழக அரசு ஓட்டு வங்கிக்காக சிறுபான்மையினரை மத்திய அரசுக்கு எதிராக திருப்புவதைக் கண்டித்து இந்த ஊர்வலம் நடக்க உள்ளது. நீட் தேர்வு சம்பந்தமாக தமிழக அரசு தொடர்ந்து இரட்டை நிலையை கடைபிடிக்கிறது. நீட் வருவதற்கு முன்பும், பின்பும் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் உண்மை வெளிவரும்.நீட் தேர்வு கடினமானது என்ற மனநிலையை உருவாக்கி மாணவர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் வழங்கி அதை அரசியலாக்கிவிட்டனர். தேசிய அளவில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உள்ள மாநிலங்களில்கூட நீட் தேர்வை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் திட்டமிட்டு தமிழகத்தில் இந்த அரசியலை செய்கின்றனர். திருமாவளவன் பட்டியலின மக்களை வன்முறை பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதை மறைக்க பட்டியல் சமூகத்தினர் பாதித்தால், பா.ஜ., சங்பரிவார் அமைப்பினர் செய்வதாக பிரசாரம் செய்கிறார்.இது பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினரை பா.ஜ.,வுக்கு எதிராக திருப்பும் சதி. பட்டியல் சமூகத்தினர், குறிப்பிட்ட சமூகத்தினரிடையே மோதல் போக்கை உருவாக்கியதால்தான் இன்று மாணவர்களிடம் இப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்க ஆர்.எஸ்.எஸ்., மீது பழிபோடுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டால் அங்கு ஜாதி, மத, மொழியை கடந்து தேசத்திற்காக பலமான கட்டமைப்பை உருவாக்கி உள்ளது தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us