தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில உலக யோகாசன போட்டி: ஓய்வு பெற்ற ஆசிரியர் சாதனை

அகில உலக யோகாசன போட்டி: ஓய்வு பெற்ற ஆசிரியர் சாதனை

அகில உலக யோகாசன போட்டி: ஓய்வு பெற்ற ஆசிரியர் சாதனை


UPDATED : ஜன 19, 2010 12:00 AM

ADDED : ஜன 19, 2010 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2010 12:00 AM ADDED : ஜன 19, 2010 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பத்மநாபன். இவர் புதுச்சேரியில் நடந்த 17வது அகில உலக யோகாசன போட்டியில் பங்கேற்றார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.


பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த இதில்,50 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பத்மநாபன் பத்ம மயூராசனம், யோக முத்திராசம், ஹனுமானாசனம், சகோராசனம், பத்ம சிரசாசனம் போன்ற யோகாசனங்கள் செய்து, எழுத்து முறை தேர்விலும் பங்கேற்று முதலிடத்தை பிடித்தார். இவருக்கு கேடயம் சான்றிதழும் வழங்கப்பட்டது. உலக அளவில் நடந்த போட்டியில் பங்கேற்ற பத்மநாபனை கலெக்டர் ஹரிஹரன் பாராட்டினார். இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 22வது அகில உலக யோகாசன போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us