தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைதுார கல்வியில் பிசியோதெரபி படிப்பு; விதிகளுக்கு புறம்பானது என கொதிப்பு

தொலைதுார கல்வியில் பிசியோதெரபி படிப்பு; விதிகளுக்கு புறம்பானது என கொதிப்பு

தொலைதுார கல்வியில் பிசியோதெரபி படிப்பு; விதிகளுக்கு புறம்பானது என கொதிப்பு


UPDATED : நவ 16, 2023 12:00 AM

ADDED : நவ 16, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2023 12:00 AM ADDED : நவ 16, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பிசியோதெரபி படிப்பை தொலைதுார முறையில் வழங்கக்கூடாது என நீதிமன்ற வழிகாட்டுதல், பல்கலை மானிய குழு விதிகள் இருந்தும் தொலைதுார படிப்பு நடத்தப்போவதாக சில கல்வி நிறுவனங்கள் அறிவித்திருப்பதற்கு இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு கிளை தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
மருத்துவத் துறையில் பிசியோதெரபி போன்ற படிப்புகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. ஆனால் அரசு வேலை வாய்ப்புகள் போதுமானதாக இல்லை. அப்படியே வாய்ப்புகள் வந்தாலும் ரூ.12 ஆயிரம் சம்பளம் என நிர்ணயிக்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு மாத ஊதியம் ரூ.13 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புற, இரண்டாம் நிலை நகர்பகுதிகள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகள் பிசியோதெரபி சேவை பற்றி விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவரவர் இருப்பிடங்களுக்கு தேடி சென்று பிசியோதெரபி சேவை வழங்கும் சூழல் பெருகி வருகிறது.இதை சில கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். சமீபத்தில் அருப்புக்கோட்டை பகுதி நிறுவனம் ஒன்று BPT, BNYS, MD போன்ற பல மருத்துவ படிப்புகளுக்கு கல்லுாரிக்கு வராமலே படித்து சான்றிதழ் பெறலாம் என அறிவித்தது.அந்நிறுவனத்திற்கு இந்த படிப்புகளை நடத்த போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை. கல்லுாரிக்கு வெளிமாநில பல்கலை மூலம் சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். ஒரு மாநிலத்தில் உள்ள பல்கலை வேறு ஒரு மாநிலத்தில் தொலைதுார கல்வி வழங்கக்கூடாது என பல்கலை மானிய குழு விதி வகுத்துள்ளது. பிசியோதெரபி படிப்பை தொலைதுார முறையில் வழங்கக்கூடாது என நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. இதை கருத்திற்கொண்டு தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us