பாராக மாறிய அங்கன்வாடி வளாகம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
பாராக மாறிய அங்கன்வாடி வளாகம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 10:31 AM
அலங்காநல்லுார்:
அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சி முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள அங்கன்வாடி வளாகத்தை குடி மகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துவது மட்டுமின்றி மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் பெற்றோர் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப மறுத்ததை தொடர்ந்து அருகே உள்ள சமுதாய கூடத்தில் மையம் செயல்பட்டது.இம்மையத்தில் 25 குழந்தைகள் உள்ளனர், அருகே ஆர்.ஐ.,அலுவலகம் உள்ளது. அங்கன்வாடி முன்பாக குடிமகன்கள் முகாமிடுவதை தடுக்க இரும்பு தடுப்பு கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஏறி குதித்து உள்ளே வரும் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு 10க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை அங்கன்வாடி முன்பாக உடைத்துள்ளனர். இப்பகுதியை குடிமகன்கள் பயன்படுத்துவதை தடுக்கவும், இங்கு மது அருந்துவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
