தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக ஆசிரியர் கூட்டணி மானூர் வட்டார செயற்குழு கூட்டம் சிந்துபூந்துறை
மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் எட்வர்ட் ஞானசேகர்
தலைமை வகித்தார். செல்வி வரவேற்றார். செயலாளர் உமாசங்கர் உட்பட பலர்
பேசினர்.

வரும் ஜூன் மாதம் நடக்கும் உலக தமிழ் செம்மொழி
மாநாட்டில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். 70 மாணவர்களுக்கு
மேற்பட்ட பள்ளிகளுக்கு 3 ஆசிரியர்கள் என்ற அரசாணையை அரசு உதவி பெறும்
பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான
தொகுப்பூதிய காலத்திற்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். ஒன்றிய பள்ளி
ஆசிரியர்களின் வருங்கால சேம நல நிதியை மாநில கணக்காயர் அலுவலகமே
நிர்வகிக்க வேண்டும்.

6வது ஊதிய குழு ஒரு நபர் அறிக்கையை உடனடியாக
அமல்படுத்த வேண்டும். நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில்
பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் முருகேசன், குணசேகர்,
முப்பிடாதி, லட்சுமணன், பால்துரை, ஜேசையா, கணேஷ், சாந்தி, தில்லை
முத்துலட்சுமி, பொன்னம்மாள், முத்தம்மாள், அன்னம்மாள், ராஜேஸ்வரி, ஜமுனா,
உமாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us