பள்ளி கல்வி துறையின் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
பள்ளி கல்வி துறையின் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:18 AM
கும்மிடிப்பூண்டி:
பள்ளி கல்வி துறை சார்பில், 2023 -- 24ம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும், சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு, பேராசிரியர் அன்பழகனார் விருதும் வழங்கப்பட்டது.ஒவ்வொரு விருதுடன், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. கவரைப்பேட்டையில் இயங்கி வரும் இரு அரசு பள்ளிகள் மேற்கண்ட இரு விருதுகளையும் பெற்றது.கவரைப்பேட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரிக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும், கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகனார் விருதும் வழங்கப்பட்டது. பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் அய்யப்பனுக்கு விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற இரு பள்ளி தலைமை ஆசிரியர்களை, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.