கோல்கட்டா டாக்டர் கொலை: மருத்துவக்கல்லூரி டீனுக்கு உண்மை கண்டறியம் சோதனை
கோல்கட்டா டாக்டர் கொலை: மருத்துவக்கல்லூரி டீனுக்கு உண்மை கண்டறியம் சோதனை
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:39 PM
கோல்கட்டா:
மேற்கவங்கம் மாநிலம் கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் , மருத்துவமனை டீன் உள்ளிட்ட சிலருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.
இந்நிலையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன், சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உள்ளிட்ட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணை நடத்திய மருத்துவக்கல்லூரி டீன் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 4 பேருக்கு பாலிகிராப் எனப்படும் உண்மையை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.