தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா


UPDATED : ஜன 18, 2025 12:00 AM

ADDED : ஜன 18, 2025 09:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2025 12:00 AM ADDED : ஜன 18, 2025 09:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்ட பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து, அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, படிப்படியாக, ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடு இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணையச் செய்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. சரித்திர சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

விண்வெளியில் இரண்டு விண்கலன்களை இணையச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். இந்த சாதனை, இந்தியாவின் வருங்கால விண்வெளித் திட்டங்களுக்கு உதவும் ஒரு படிக்கல்லாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us