கல்வி மட்டுமே மனிதனை முழுமையாக்கும் கல்லுாரி விழாவில் அறிவுரை
கல்வி மட்டுமே மனிதனை முழுமையாக்கும் கல்லுாரி விழாவில் அறிவுரை
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:15 AM
திருப்பரங்குன்றம்:
கல்வி மட்டுமே மனிதனை முழுமையாக்குகிறது என மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த விழாவில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., பேசினார்.
இக் கல்லுாரியின் சுயநிதிப் பிரிவு சார்பில் கல்லுாரி நாள் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவர்களுக்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கி பேசியதாவது:
கல்வி மட்டுமே மனிதனை முழுமையாக்குகிறது. சிறந்த கல்வி பெற நுாலகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகெங்கும் சாதனை படைத்தவர்கள், படைப்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்கின்றனர். படிக்கும் போது உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணம், செயல், சிந்தனை தெளிவாக இருந்தால் உங்கள் பயணம் பெரிய வெற்றி அடையும் என்றார்.
சிறந்த மாணவராக தேர்வான லிங்கப் பெருமாளுக்கு மன்னர் திருமலை நாயக்கர் விருது, சிறந்த மாணவி சுவிதாவுக்கு ராணிமங்கம்மாள் விருது வழங்கப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவர் பரிமளா நன்றி கூறினார்.