sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிமாநில பள்ளிகளுக்கு தமிழ் புத்தகம் இலவசமாக தர அரசு சம்மதம்

வெளிமாநில பள்ளிகளுக்கு தமிழ் புத்தகம் இலவசமாக தர அரசு சம்மதம்

வெளிமாநில பள்ளிகளுக்கு தமிழ் புத்தகம் இலவசமாக தர அரசு சம்மதம்


UPDATED : ஆக 22, 2025 12:00 AM

ADDED : ஆக 22, 2025 09:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2025 12:00 AM ADDED : ஆக 22, 2025 09:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
வெளி மாநிலங்களில் தமிழ் சங்கங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, இலவசமாக தமிழ் பாடப் புத்தகங்களை வழங்க அரசு சம்மதித்துள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில், தமிழ் சங்கத்தினரால் நடத்தப்படும் தமிழ் பள்ளிகளுக்கு, தமிழக அரசு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது.

அதிக செலவு ஏற்படுவதாகக் கூறி, தமிழக அரசு பாடநுால் கழகம், இந்த ஆண்டு புத்தகங்கள் வழங்குவதை நிறுத்தியது.

இதனால், அங்குள்ள தமிழர்களின் குழந்தைகள், தமிழ் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன், தமிழ்வழி பள்ளிகள் மூடப்படும் அபாயமும் உருவானது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து, கடந்த 12ம் தேதி, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.

இதையடுத்து, தமிழக பாடநுால் கழகம், வெளி மாநிலங்களில் தமிழ் சங்கத்தினரால் நடத்தப்படும் பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், பழைய நடைமுறைப்படி தமிழ் புத்தகங்களை இலவசமாக வழங்க முன் வந்து உள்ளது.

இது குறித்த தகவலை, அயலக தமிழ் அமைப்புகள் மற்றும் இந்திய மாநில தமிழ் சங்கங்களுக்கு அனுப்பி உள்ளது.

அதில், பள்ளிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை தெரிவித்து, சென்னை வட்டார அலுவ லகம் மற்றும் அடையாறு கிடங்கில், உரிய எண்ணிக்கையில் தமிழ் பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியதற்கான ஒப்புதலை பெற்று, பாடநுால் கழகத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அடுத்த கல்வியாண்டுக்கான தேவை குறித்து, வரும் டிசம்பர் மாதமே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us