sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்க வரைவு அறிக்கை வெளியீடு

கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்க வரைவு அறிக்கை வெளியீடு

கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்க வரைவு அறிக்கை வெளியீடு


UPDATED : ஆக 26, 2025 12:00 AM

ADDED : ஆக 26, 2025 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2025 12:00 AM ADDED : ஆக 26, 2025 10:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை அமைப்பான, என்.ஐ.ஆர்.எப். சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதுபோல, மாநில அளவில், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் உள்ள கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை எவ்வாறு தயார் செய்வது என்பது தொடர்பான வரைவு அறிக்கையை, மாநில உயர் கல்வி மன்றம் வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கையில், பல்கலை, தன் னாட்சி பெற்ற, தன்னாட்சி பெறாத கல்லுாரி என, மூன்று பிரிவுகளாக, கல்லுாரிகள் பிரிக்கப் பட்டு ள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், மாணவர்களின் கற்றல் திறன், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, மாண வர்களுக்கான உதவி, சமூக நீதி என, ஏழு வகையான தலைப்புகளில் தலா 700 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த வரைவு அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், சென்னை பல்கலையில் நேற்று நடந்தது. மாநில உயர்கல்வி மன்றத் துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், சென்னை பல்கலையின் கீழ் இயங்கும், 138 கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், 27 குழுக்களாக பங்கேற்று, வரைவு அறிக்கை தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அடுத்ததாக, தமிழகத்தின் மற்ற 12 பல்கலையிலும், இதுபோன்ற கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக, மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பிஎச்.டி. 'சர்வே' தமிழகம் முழுதும் உள்ள, 13 பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பிஎச்.டி. படிக்கும் 47,000 மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பை, உயர் கல்வித்துறை செயலர் சங்கர் துவக்கி வைத்தார். பிஎச்.டி. நிறைவு செய்வதில், மாணவர்களுக்கு ஏற்படும் காலதாமதம் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்த சர்வே எடுக்கப்படுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us