sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மர் கிராம சுகாதார மையத்திற்கு தேசிய தரநிலை சான்றிதழ்

ஜிப்மர் கிராம சுகாதார மையத்திற்கு தேசிய தரநிலை சான்றிதழ்

ஜிப்மர் கிராம சுகாதார மையத்திற்கு தேசிய தரநிலை சான்றிதழ்


UPDATED : அக் 22, 2025 04:40 AM

ADDED : அக் 22, 2025 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2025 04:40 AM ADDED : அக் 22, 2025 04:40 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் கிராம சுகாதார மையம், தேசிய தரநிலை சான்றிதழைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் நடந்த மதிப்பீட்டில் இந்த மையம் 91.05 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.

இதனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த சான்றிதழைப் பெறும் முதலாவது சுகாதார மையமாக இது அமைந்துள்ளது. இந்த மையம் ராமநாதபுரம், தொண்டமாநத்தம், தூத்திப்பேட்டை, பிள்ளையார்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களில் 11,200க்கும் மேற்பட்ட மக்களுக்கு 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி கூறுகையில், “இந்த அங்கீகாரம் ஜிப்மருக்கு பெருமை. இது தரமான மற்றும் புதுமையான சுகாதார சேவைகளுக்கான எங்களின் முயற்சியை வெளிப்படுத்துகிறது” என்றார்.

மேலும், குருசுகுப்பம் நகர்ப்புற சுகாதார மையமும் சுமார் 9,000 மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த இரு மையங்களும் யோகா வகுப்புகள், தொலைதூர ஆலோசனை சேவைகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us