UPDATED : அக் 23, 2025 07:45 AM
ADDED : அக் 23, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை அனுப்பானடி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.52 லட்சத்தில் 3 வகுப்பறைகள், திரவுபதியம்மன் எண்:2 ஆரம்ப பள்ளியில் ரூ.20 லட்சத்தில் 2 கூடுதல் வகுப்பறைகள், மானகிரி ஆரம்பப் பள்ளியில் ரூ.31 லட்சத்தில் 12, செனாய்நகர் நடுநிலைப் பள்ளியில் ரூ.18 லட்சத்தில் 4 கழிப்பறைகளை கமிஷனர் சித்ரா, துணைமேயர் நாகராஜன் திறந்து வைத்தனர்.
கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன், உதவி கமிஷனர் மணிமாறன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.