sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனுவை முடித்து வைத்த ஆணையர்: மீண்டும் விசாரிக்க கவர்னர் உத்தரவு

மனுவை முடித்து வைத்த ஆணையர்: மீண்டும் விசாரிக்க கவர்னர் உத்தரவு

மனுவை முடித்து வைத்த ஆணையர்: மீண்டும் விசாரிக்க கவர்னர் உத்தரவு


UPDATED : டிச 01, 2025 07:47 AM

ADDED : டிச 01, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2025 07:47 AM ADDED : டிச 01, 2025 07:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பாலிடெக்னிக் தொடர்பான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில தகவல் ஆணையருக்கு, கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி தாலுகாவை சேர்ந்தவர் ருமன்சார். தற்போது, சென்னையில் உள்ளவர், 2023 ஆகஸ்ட் மாதம், மாவட்ட தகவல் அலுவலருக்கு மனு அனுப்பினார்.

அதில், ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் வருகை பதிவேடுகள்; கல்லுாரியின் மறு சீரமைப்பு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை விபரங்களை கேட்டிருந்தார்.

பொது தகவல் அலுவலர், கல்லுாரி முதல்வரின் நேர்முக உதவியாளர் ஆகியோர், ஆவணங்களை வழங்க மறுத்துள்ளனர். பின், மாநில தகவல் ஆணையத்தில், 2023 நவம்பரில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர், 'தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மனுதாரர் கேட்டுள்ளார். அதனால், வழக்கை முடித்து வைக்கிறேன்' என, கூறியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரர், தன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு, கவர்னர் ரவிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, 'மனுதாரரின் மனுவை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையத்துக்கு, கவர்னர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us