sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புத்தகத்திற்கும் பெற்றோருக்கும் தொடர்புடைய பாடத்திட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலோசனை

/

புத்தகத்திற்கும் பெற்றோருக்கும் தொடர்புடைய பாடத்திட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலோசனை

புத்தகத்திற்கும் பெற்றோருக்கும் தொடர்புடைய பாடத்திட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலோசனை

புத்தகத்திற்கும் பெற்றோருக்கும் தொடர்புடைய பாடத்திட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலோசனை


UPDATED : பிப் 05, 2026 12:28 PM

ADDED : பிப் 05, 2026 12:28 PM

Google News

UPDATED : பிப் 05, 2026 12:28 PM ADDED : பிப் 05, 2026 12:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'புத்தகங்கள், பெற்றோருக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்' என புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு பாடத்திட்டம் தயாரிப்பு குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், புதிய பாடத் திட்டங்கள் மறுவடிவமைப்புக் குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., தயாளன் வரவேற்றார். எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் லதா, இணை இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆறு முதல் பிளஸ் 2 வரை மறுவடிவம் செய்ய வேண்டிய பாடத்திட்டம் குறித்து அவர்கள் பேசுகையில், தற்போது ஆசிரியர், மாணவருக்கும் தொடர்புடைய பாடத்திட்டமாக உள்ளது. இதை பெற்றோருக்கும், புத்தகங்களுக்கும் இடையே தொடர்புடையதாக உருவாக்க வேண்டும். ஆங்கிலத்தில் மனப்பாடம் பகுதி பாடல்கள் நீண்ட வரிகளை கொண்டுள்ளன. மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சுல்தான் அகமது இஸ்மாயில் பேசுகையில் கல்லுாரி பேராசிரியர் இன்றி இந்த புதிய பாடத் திட்டங்கள் முழுவதும் பள்ளி ஆசிரியர்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அனைத்து ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us