sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நரவனே எழுதிய புத்தகம் லீக் டில்லி போலீஸ் வழக்கு பதிவு

நரவனே எழுதிய புத்தகம் லீக் டில்லி போலீஸ் வழக்கு பதிவு

நரவனே எழுதிய புத்தகம் லீக் டில்லி போலீஸ் வழக்கு பதிவு


UPDATED : பிப் 11, 2026 08:05 AM

ADDED : பிப் 11, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 08:05 AM ADDED : பிப் 11, 2026 08:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ராணுவ முன்னாள் தளபதி நரவனே, 65, எழுதிய, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' புத்தகம் இது வரை வெளியிடப்படாத நிலையில், சமூக ஊடகங்களில் அந்த புத்தகம் கசிந்த விவகாரத்தில், டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, 2019 டிச., - 2022 ஏப்., 30 வரை, நம் ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றினார்.

இவர், 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற பெயரில், தன் சுயசரிதை புத்தகத்தை எழுதி உள்ளார். அதில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினர் உடனான மோதல் உட்பட பல்வேறு விவகாரங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த புத்தகத்துக்கு ராணுவ அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதே சமயம், 'கேரவன்' என்ற ஆங்கில இணையதளத்தில் புத்தகத்தில் உள்ள சில முக்கிய தகவல்கள் வெளியாகின. இதை சுட்டிக்காட்டி, நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பார்லி., வளாகத்தில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், இது வரை வெளியாகாத, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' புத்தகத்தை உயர்த்தி காண்பித்தார். வெளி வராத புத்தகம் ராகுலுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்ற பேச்சு டில்லி அரசியலில் அடிபட்டது.

இந்நிலையில், 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' புத்தகத்தின் நகல் மற்றும் பி.டி.எப்., வடிவிலான கோப்பு, சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தகவல் வெளியானது.

இந்த நகல், 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us