sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டேங்க் சுத்தம் செய்த மாணவர்கள்: பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை

/

டேங்க் சுத்தம் செய்த மாணவர்கள்: பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை

டேங்க் சுத்தம் செய்த மாணவர்கள்: பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை

டேங்க் சுத்தம் செய்த மாணவர்கள்: பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை


UPDATED : பிப் 11, 2026 01:50 PM

ADDED : பிப் 11, 2026 01:52 PM

Google News

UPDATED : பிப் 11, 2026 01:50 PM ADDED : பிப் 11, 2026 01:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்:
கீழத்தேனுார் நடுநிலைப் பள்ளியில் மினி டேங்கை மாணவர்கள் சுத்தம் செய்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழத்தேனுாரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 144 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இதையொட்டி மாணவர்கள் சிலர், பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்புறத்தில் உள்ள மினி டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் டேங்க் சுத்தம் செய்யும் வீடியோ நேற்று முன்தினம் வைரலானது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் ராமலிங்கத்திற்கு மாவட்ட கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) பாலமுருகன் உத்தரவின் பேரில், ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் தில்லைக்கரசி பள்ளிக்கு நேற்று சென்று, பள்ளி தலைமை ஆசிரியர், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தனி, தனியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை தொடர்பான அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us