sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொல்லியலும் கல்வெட்டியலும் சேர்ந்தால் வரலாற்றை சீராக எழுதலாம்: தங்கம் தென்னரசு

/

தொல்லியலும் கல்வெட்டியலும் சேர்ந்தால் வரலாற்றை சீராக எழுதலாம்: தங்கம் தென்னரசு

தொல்லியலும் கல்வெட்டியலும் சேர்ந்தால் வரலாற்றை சீராக எழுதலாம்: தங்கம் தென்னரசு

தொல்லியலும் கல்வெட்டியலும் சேர்ந்தால் வரலாற்றை சீராக எழுதலாம்: தங்கம் தென்னரசு


UPDATED : பிப் 12, 2026 09:47 PM

ADDED : பிப் 12, 2026 09:48 PM

Google News

UPDATED : பிப் 12, 2026 09:47 PM ADDED : பிப் 12, 2026 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
“தொல்லியலும், கல்வெட்டியலும் சேர்ந்து இயங்கினால், நம் வரலாற்றை சீராக எழுதலாம்,” என, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக தொல்லியல் துறை சார்பில், 'தமிழ் கல்வெட்டியல்' குறித்த, நான்கு நாள் சர்வதேச கருத்தரங்கு, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், நேற்று துவங்கியது. தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், தமிழக 'கீறல்' குறியீடுகள் தொடர்பான இணையதளம் மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் பதிவாகி உள்ளன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு, தென் மாநிலங்களைச் சேர்ந்தவை. தமிழகத்தில் மட்டும், 30,000 கல்வெட்டுகள் உள்ளன.

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், 250க்கும் அதிகமான, பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கரிக்கையூர் 'பாறை' ஓவியங்கள் குறித்த ஆய்வு, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

கோவில் கல்வெட்டுகள், மத மற்றும் பண்பாட்டு தகவல்களை வழங்கினாலும், குமிழி மற்றும் மதகு கல்வெட்டுகள், பழங்கால தொழில்நுட்ப அறிவை, மிகத் தெளிவாக மீளமைக்க உதவுகின்றன. தொல்லியலும், கல்வெட்டியலும் சேர்ந்து இயங்கினால், நம் வரலாற்றை சீராக எழுதலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us