sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது

விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது

விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது


UPDATED : மார் 07, 2026 11:34 AM

ADDED : மார் 07, 2026 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2026 11:34 AM ADDED : மார் 07, 2026 11:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.

'அவுட்லுக் பிசினஸ் ஸ்பாட்லைட்' என்ற முன்னணி வணிக இதழ், பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் தலைவர்கள், தொடக்க நிறுவனங்கள், எதிர்காலத்தை வடிவமைக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் தனிநபர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, இந்தாண்டிற்கான தெற்கு பிரிவு சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. பல்வேறு தொழில்துறை மற்றும் கல்வித்துறை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விநாயக மிஷின் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் டீன் செந்தில்குமார் பங்கேற்று, குழு விவாதத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு மற்றும் நிறுவன மாற்றத்தின் முக்கிய பங்களிப்பு குறித்து பேசினார்.

தொடர்ந்து, சுகாதாரத் துறையில் பல்வேறு புதுமைகளை செயல்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிறந்த பங்களிப்பினை அளித்து வரும் விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி, சென்னை ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு 'அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கான விருது' வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

இவ்விருது கிடைப்பதற்கு சிறந்த அடித்தளமிட்டு செயலாற்றி வரும் கல்லுாரியின் டீனுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் மற்றும் துணைத் தலைவர் அனுராதா கணேசன், பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us