sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் கண்டிப்பால் மாணவி தற்கொலை முயற்சி; வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்

ஆசிரியர் கண்டிப்பால் மாணவி தற்கொலை முயற்சி; வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்

ஆசிரியர் கண்டிப்பால் மாணவி தற்கொலை முயற்சி; வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்


UPDATED : மார் 23, 2026 10:57 AM

ADDED : மார் 23, 2026 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2026 10:57 AM ADDED : மார் 23, 2026 10:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம், கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்துார் அரசு நடுநிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, 6வது படிக்கும், 12 வயது மாணவி, அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்து வந்தார். இதனால் ஆசிரியர்கள், அவரை திட்டி தாக்கியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கடந்த, 20ல் பள்ளி சென்ற மாணவியை மீண்டும்

ஆசிரியர்கள், ஆபாச வார்த்தைகளால் கண்டித்துள்ளனர். இதில் வேதனை அடைந்த மாணவி, பள்ளியில் இருந்து மதியம் வீட்டுக்கு சென்ற நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்கம் அடைந்த நிலையில், மாணவியை மீட்ட பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தனர். மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில், பள்ளியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ஆபாசமாக பேசி அடித்த ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்.

இதனால் ஆசிரியர்களிடம் விசாரிக்கின்றனர். மேலும் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவுப்படி, கல்வித்துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று, சேலம் நீதிமன்றம், ஜே.எம்., 5 மாஜிஸ்திரேட் தீர்த்தா, மருத்துவமனையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us