sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெருமிதம்

அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெருமிதம்

அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெருமிதம்


UPDATED : ஏப் 08, 2026 05:39 PM

ADDED : ஏப் 08, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2026 05:39 PM ADDED : ஏப் 08, 2026 05:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர்:
“உலகிலேயே, அதிவேகமான, 'சூப்பர்சோனிக் க்ரூஸ்' ஏவுகணை இந்தியாவில் உள்ளது,” என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறினார்.

கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், 'பிரமோஸ்' ஏவுகணையின் தந்தையுமான சிவதாணு பிள்ளை நேற்று வருகை தந்தார். கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்கள் உருவாக்கிய, பல்வேறு துறைகளின் புதுமையான திட்டங்களை பார்வையிட்டார்.

பின், அவர் கூறியதாவது:



மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா போர் காரணமாக உலக நாடுகளுக்கு பெரிய கஷ்டம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. பிரமோஸ் ஏவுகணை, உலகிலேயே அதிவேகமான சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும்.

இது இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் முக்கிய ஆயுதமான, 'அக்னி' ஏவுகணை. 5,000 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் வரை தாக்கும் திறன் கொண்டது.

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலால், நம்மிடம், 'சிந்துார் ஆப்பரேஷனில்' பாகிஸ்தான் சரணடைந்தது. நாட்டின் பாதுகாப்பு வலிமையை, இது உலக அளவில் உயர்த்தி உள்ளது.

ஏ.ஐ., தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளது. தற்போது செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்துவதால், செலவு, நேரம் குறைகிறது.

செயற்கைக்கோள், நவீன விவசாயத்திற்கு மிக முக்கியமானதாகும். ஏ.ஐ., தொழில் நுட்பம், செயற்கைக்கோள் இணைந்தால் வேளாண் கண்காணிப்புக்கு பெரிய உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us