நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: முதல்வர் ரேகா பெருமிதம்
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: முதல்வர் ரேகா பெருமிதம்
UPDATED : ஏப் 14, 2026 09:23 PM
ADDED : ஏப் 14, 2026 09:24 PM
புதுடில்லி:
'இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பல விதங்களில் சேவை புரிகின்றனர். அந்த வகையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, பெண்கள் வளர்ச்சியை பெரிய அளவில் மேற்கொள்ளும்,' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லியில் பிரதமர் மோடி முன்னிலையில், பெண்கள் பலர் பங்கேற்ற மகளிர் மாநாடு நடந்தது.
அதில், டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பெண்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பல விதங்களில் சேவை புரிகின்றனர். அந்த வகையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, இந்த நாட்டில் பெண்கள் வளர்ச்சியை பெரிய அளவில் மேற்கொள்ளும்.
எவ்வித சவால்களையும் சந்திக்கும் திறன் படைத்த பெண்கள், அதற்கான வாய்ப்புகளுக்காக எதிர்நோக்கி இருக்கின்றனர். எனவே, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் எந்த மசோதாவையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

