sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி கண்ணகி நகரில் இலவசமாக கற்கலாம்

மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி கண்ணகி நகரில் இலவசமாக கற்கலாம்

மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி கண்ணகி நகரில் இலவசமாக கற்கலாம்


UPDATED : மே 18, 2026 11:12 PM

ADDED : மே 18, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 11:12 PM ADDED : மே 18, 2026 11:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கண்ணகி நகர்:
மாணவ, மாணவியருக்கான தனித்திறன் பயிற்சி, கண்ணகி நகரில் தொடங்கியுள்ளது. இலவசமான இந்த பயிற்சியில் பங்கேற்க, முதல் தலைமுறை கற்றல் மையம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையம் இணைந்து, ட்ரோன், கார், ஆட்டோ ஓட்டுநர் இலவச பயிற்சியை, கண்ணகி நகரில் வழங்கின. முழு பயிற்சி முடித்த 50 பேருக்கு, சான்றிதழ், சீருடை மற்றும் உரிமம், நேற்று வழங்கப்பட்டது.

மேலும், கோடை காலத்திற்கான துடும்பாட்டம், தேவராட்டம், பறையாட்டம், நிகழ்த்து கலை, ஓவியம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சியை, தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு தொடங்கி வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:

விவசாயம், பாதுகாப்பு, கண்டுபிடிப்பு, நில அளவை, ஆய்வு போன்றவைக்கு ட்ரோன் பயன்படுகிறது. அனைத்து துறைகளிலும், தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருவதால், மாணவ, மாணவியர், தொழில்நுட்ப ரீதியான கல்வி பயில்வது அவசியம்.

ஓட்டுநர் தொழிலில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பது, ஆக்கப்பூர்வமான சமூகம் உருவாக வழிவகுக்கும். நாகரிக உலகில், பாரம்பரிய கலைகளை அரிதாக பார்க்கும் நிலை உள்ளது.

தமிழர் பண்பாடு, கலாசாரம் மேலோங்க, இளைஞர்களிடம் பாரம்பரிய கலை ஆர்வம் அதிகரிக்க வேண்டும். தீய பழக்கங்களில் இருந்து விடுபட, கோடை காலத்தில் மாணவ, மாணவியரின் தனித்திறன் வெளிகொண்டு வரும் பயிற்சிகளில் சேர வேண்டும். இதற்கு, இங்கு வழங்கப்படும் இலவச பயிற்சிகள் மிகவும் பயன் அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோடை கால இலவச பயிற்சிகளில் சேர, 044 - 2458 1021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, முதல் தலைமுறை கற்றல் மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us