தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாட்ஸ் அப் முதன்மை செயல் அதிகாரியாக குணால் ஷா நியமனம்

வாட்ஸ் அப் முதன்மை செயல் அதிகாரியாக குணால் ஷா நியமனம்

வாட்ஸ் அப் முதன்மை செயல் அதிகாரியாக குணால் ஷா நியமனம்


UPDATED : ஜூன் 23, 2026 07:53 PM

ADDED : ஜூன் 23, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 07:53 PM ADDED : ஜூன் 23, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
வாட்ஸ் அப்பின் சர்வதேச முதன்மை செயல் அதிகாரியாக கிரெட் நிறுவனத்தின் தலைவர் குணால் ஷா நியமிக்கப்பட்டு உள்ளார்.

2019ம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் வில்கேத் கார்ட். அவர் தமது தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

ஆனாலும் மெட்டா நிறுவனத்திலேயே வில்கேத் கார்ட் நீடித்து வருகிறார். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுகர்வோர் செயலிகள், தயாரிப்புகளை உருவாக்கும் புதிய பிரிவின் தலைமை பதவியில் உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக வாட்ஸ் அப் சர்வதேச நிர்வாக்குழுவின் புதிய முதன்மை செயல் அதிகாரியாக குணால் ஷா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த விவரத்தை அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு விரைவில் அந்த பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.

அதில், “வாட்ஸ் அப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்காக மெட்டா தலைமை பொறுப்பில் உள்ளவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குணால் ஷா தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். விரைவில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு இடம் பெயர இருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us