தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., டிஜிட்டல் மதிப்பீட்டு முறையால் மாணவர்கள் விரக்தி: உச்சநீதிமன்றம் கவலை

சி.பி.எஸ்.இ., டிஜிட்டல் மதிப்பீட்டு முறையால் மாணவர்கள் விரக்தி: உச்சநீதிமன்றம் கவலை

சி.பி.எஸ்.இ., டிஜிட்டல் மதிப்பீட்டு முறையால் மாணவர்கள் விரக்தி: உச்சநீதிமன்றம் கவலை


UPDATED : ஜூலை 16, 2026 10:26 AM

ADDED : ஜூலை 16, 2026 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 10:26 AM ADDED : ஜூலை 16, 2026 10:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பொதுத்தேர்வு விடைத்தாள்களை கணினி வழியாக திருத்தும் 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' முறையால் மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு விடைத்தாள்களை, 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' முறையில் திருத்துவதற்கு, தனி விதிகள் வகுக்கவும், அதை மேற்பார்வையிட உயர்மட்ட குழு அமைக்க கோரியும், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 'இளம் மாணவர்கள் எந்த அளவுக்கு விரக்தி அடைந்துள்ளனர் என்பதை பாருங்கள். டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் அமைப்பு ரீதியான குறைபாடுகள் இருப்பது தெளிவாக தெரிகிறது' என, கவலை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பெரும்பாலான தனிப்பட்ட மதிப்பெண் முரண்பாடுகள் சரி செய்யப்பட்டுவிட்டன. எனினும் அமைப்பு ரீதியான குறைகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதா சவுஹான் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, தற்போதைய மதிப்பீட்டு முறையை ஆய்வு செய்து தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ., மேற்கொண்டு வரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us