தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் விரைவில் அட்மிஷன்

அரசு கல்லுாரியில் விரைவில் அட்மிஷன்

அரசு கல்லுாரியில் விரைவில் அட்மிஷன்


UPDATED : ஜூலை 16, 2026 06:59 PM

ADDED : ஜூலை 16, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 06:59 PM ADDED : ஜூலை 16, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் அரசின் அனுமதியின்படி இடங்கள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டன. வழக்கமாக உள்ள 1,727 இடங்களுடன், 289 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதால், மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,016 ஆக உயர்ந்தது.

இது வரை 1,768 மாணவர்கள் சேர்ந்த நிலையில், 248 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கல்லுாரி வளாகத்தில் நேற்று கவுன்சிலிங் நடந்தது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 76 பேருக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது.

மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப, விரைவில் கல்லுாரி வளாகத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தாமதமாக விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் இது வரை விண்ணப்பிக்க இயலாதவர்கள் உள்பட, தகுதியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us