தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயம்... மகசூல் விபரம்... லாபம் கள ஆய்வில் அறிந்த மாணவர்கள்

விவசாயம்... மகசூல் விபரம்... லாபம் கள ஆய்வில் அறிந்த மாணவர்கள்

விவசாயம்... மகசூல் விபரம்... லாபம் கள ஆய்வில் அறிந்த மாணவர்கள்


UPDATED : ஜூலை 31, 2026 02:57 PM

ADDED : ஜூலை 31, 2026 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2026 02:57 PM ADDED : ஜூலை 31, 2026 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:
ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்த ஏழு பயிற்சியாளர்கள் மற்றும் கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆகியோர், சிறுமுகை அருகே இயற்கை விவசாய நிலத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் ஈடுபட்டனர்.

சிறுமுகை அடுத்த சம்பரவள்ளிபுதுாரில், முன்னோடி விவசாயி விஸ்வநாதன், இயற்கை விவசாயம் செய்து வருகிறார். புதிய ரக பயிர்களை, இவர் விவசாயம் செய்து வருகிறார். இரு வாரங்களுக்கு முன், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து, மூன்று விஞ்ஞானிகள், இவரது தோட்டத்திற்கு வந்து, பயிர் செய்திருந்த புதிய ரக வாழைகளை ஆய்வு செய்தனர்.

நேற்று, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களை சேர்ந்த ஏழு பயிற்சியாளர்கள், கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரன், ஆனந்தராஜா, ஜூலியன் மற்றும் இரண்டு மாணவர்கள் ஆகியோர், விஸ்வநாதன் தோட்டத்திற்கு வந்தனர்.

இவரது நிலத்தில் பாக்கு, தென்னை, வாழை, பப்பாளி மற்றும் பலதரப்பட்ட காய்கறிகள், மக்காச்சோளம் ஆகியவற்றை பயிர் செய்துள்ளார். இந்த பயிர்கள், அங்கக வேளாண் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இவர் விவசாயம் செய்து வருகிறார்.

விவசாய முறைகள், மகசூல் விபரம், விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், விவசாயத்தில் லாபம் பெற என்னென்ன வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து, விவசாயி விஸ்வநாதன், பயிற்சியாளர்கள், வேளாண் பல்கலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us