தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டயட் சார்பில் ஆசிரியர் பள்ளிகளில் லாஜிக் லேப் அமைக்க பயிற்சி

டயட் சார்பில் ஆசிரியர் பள்ளிகளில் லாஜிக் லேப் அமைக்க பயிற்சி

டயட் சார்பில் ஆசிரியர் பள்ளிகளில் லாஜிக் லேப் அமைக்க பயிற்சி


UPDATED : அக் 01, 2026 06:40 PM

ADDED : அக் 01, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 06:40 PM ADDED : அக் 01, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ரோட்டரி சங்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில், 'லாஜிக் லேப்' அமைத்தல் குறித்த பயிற்சி முகாம், ராசிபுரத்தில் நடந்தது.

நிறுவன விரிவுரையாளர் பானுமதி வரவேற்றார். ரோட்டரி சங்க உதவி ஆளுனர் கருணாகர பன்னீர்செல்வம், செயலாளர் நமசிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:

பள்ளிகளில், 'லாஜிக் லேப்' நிறுவும் போது, மாணவர்களிடையே விமர்சன சிந்தனை வளரும். ஏன், எப்படி என, யோசிக்கும் பழக்கம் உருவாகும். பிரச்னையை பகுப்பாய்வு செய்து, அதற்கான தீர்வை எட்டும் திறன் உயரும்.

கணித பாடத்தில் உள்ள கோட்பாடுகளை மனப்பாடம் செய்யாமல், அவற்றின் பின்னணியில் உள்ள லாஜிக்கை புரிந்துகொள்ள உதவும். மூளைக்கூர்மை மற்றும் கவனிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கவும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, நிறுவன விரிவுரையாளர் பானுமதியால் உருவாக்கப்-பட்ட, 'லாஜிக் லேப்' நுால் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் சையத் முஸ்தபா, சிவபெருமான், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராமசாமி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us