தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் கல்லுாரி மாணவிகள் பணி அனுபவ திட்ட துவக்க விழா

வேளாண் கல்லுாரி மாணவிகள் பணி அனுபவ திட்ட துவக்க விழா

வேளாண் கல்லுாரி மாணவிகள் பணி அனுபவ திட்ட துவக்க விழா


UPDATED : அக் 22, 2026 05:30 PM

ADDED : அக் 22, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 05:30 PM ADDED : அக் 22, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பில் ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாய பணி அனுபவ திட்டம் துவக்க விழா நடந்தது.

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி தலைவர் குலோத்துங்கன் தலைமை தாங்கி வேளாண் பணி சார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் வரதராஜன், வி.ஏ.ஓ., சுந்தரகணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றி வேளாண் மாணவிகள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து பணி அனுபவம், தொழில்நுட்ப யுத்திகள் மற்றும் விவசாயிகளுடன் நட்புறவு கலந்து பணி அனுபவங்களை கற்று கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பேசினர்.

விவசாயிகள் கடந்த கால பயிரிடுதல், இயற்கை விவசாயம், மண்வளம் பாதுகாப்பு, இயற்கை உரங்கள் பயன்படுத்துதல், உரம் தயாரிப்பு அனுபவங்கள் குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

மாணவிகள் மகாலட்சுமி, மனிஷா, மஞ்சுளா, மேனகா, நாகலட்சுமி, நிவேதா, பவித்ரா குழுவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us