மத்திய அரசு கல்வி உதவித்தொகை பெற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி உதவித்தொகை பெற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்
UPDATED : நவ 17, 2026 05:48 PM
ADDED : நவ 17, 2026 05:49 PM
செங்கல்பட்டு:
'பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுவதாவது:
இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெ ற விரும்பும் மாணவ மாணவியர், http;//scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
கல்வி மற்றும் விடுதி கட்டணமாக ஆண்டுக்கு ஒன்பது 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ,75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதே போல், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ மாணவியருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவ,z மாணவியர் நவ., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின், கல்வி நிறுவனங்கள் சரிபார்த்து, டிச., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
