தென்னிந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான எசிஸ்டென்சா - 2014 கலை விழா
தென்னிந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான எசிஸ்டென்சா - 2014 கலை விழா
UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM
ADDED : ஜூலை 25, 2014 10:57 AM
அ நிறம் | அளவு
குறிச்சி: தென்னிந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான எசிஸ்டென்சா - 2014 கலை விழா, திருமலையாம்பாளையம் நேரு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அனிருதன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பேசுகையில், "இத்தகைய விழாக்கள், பன்முக அறிவுக்கு துாண்டுகோலாகவும் இருக்கும்" என்றார்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், தனிநபர் மற்றும் குழு நடனம், பாட்டு போட்டி, பென்சில் ஆர்ட், ஆங்கில பேச்சு போட்டி, மாஸ்டர் பிரெயின், அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
