தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பாரதியார் பல்கலை தொலைநிலை ஆன்லைன் தேர்வு வரும் 27ல் துவக்கம்

பாரதியார் பல்கலை தொலைநிலை ஆன்லைன் தேர்வு வரும் 27ல் துவக்கம்

பாரதியார் பல்கலை தொலைநிலை ஆன்லைன் தேர்வு வரும் 27ல் துவக்கம்


UPDATED : டிச 12, 2024 12:00 AM

ADDED : டிச 12, 2024 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2024 12:00 AM ADDED : டிச 12, 2024 10:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் ஆன்லைன் தேர்வுகள் துவங்க உள்ளதால், அதற்கான வழிகாட்டுதல்களை பாரதியார் பல்கலை வழங்கியுள்ளது.

தேர்வு கால அட்டவணை, பல்கலை இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத மாணவர்கள், https://coe.b-u.ac.in/sdeolp24dec/login.aspx என்ற இணைப்பை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், யூசர் நேம், பாஸ்வேர்டு உருவாக்க மாணவர்கள் தங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் விபரங்களை பூர்த்தி செய்த பின் விண்ணப்பப்படிவம், பணப்பரிவர்த்தனை விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நாள் அன்று ஆன்லைன் போர்ட்டலில் உள்நுழைந்து வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய பாடக்குறியீடு, பாடப்பெயரை தேர்வு செய்வது அவசியம். காலை, 9:00 மணிக்கு உள்நுழைந்து வினாத்தாளை காலை, 9:15 மணிக்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், 0422 - 2428189, 2428196 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு எழுதும் நேரத்தில் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுவார்கள் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us