சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் இணையவழி கலந்தாய்வு மூலம் நவம்பர் 8ல் நியமனம்
சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் இணையவழி கலந்தாய்வு மூலம் நவம்பர் 8ல் நியமனம்
UPDATED : நவ 07, 2014 12:00 AM
ADDED : நவ 07, 2014 11:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தொடக்க கல்வித் துறைக்கு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு, 144 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, நாளை (8ம் தேதி) காலை, 9:00 மணி முதல் இணையதள வழியில் நடக்கிறது.
இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பில், சம்பந்தபட்டவர்கள், டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள முகவரியின் அடிப்படையில், சம்பந்தபட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் ஆஜராக வேண்டும். அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு செட் நகல்களை கொண்டு வர வேண்டும் என, அறிவித்துள்ளார்.

