ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மாணவியர் ‘அட்மிஷன்’ தொடர்ந்து சரிவு!
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மாணவியர் ‘அட்மிஷன்’ தொடர்ந்து சரிவு!
UPDATED : ஆக 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கொல்கத்தா ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் மொத்தம் 304 இடங்கள் உள்ளன. இதில் முந்தைய (2006) ஆண்டில் 36 ஆக இருந்த மாணவியர் எண்ணிக்கை 2007ம் ஆண்டில் 34 ஆக குறைந்து. இந்த ஆண்டு மேலும் குறைந்து 26 மாணவியர் மட்டுமே அட்மிஷன் பெற்றுள்ளனர்.
லக்னோ ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் மட்டும் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இங்கு கடந்த ஆண்டில் 14 ஆக இருந்த மாணவியர் எண்ணிக்கை தற்போது 30 ஆக அதிகரித்துள்ளது.
‘பொது நுழைவுத் தேர்வுகளில் (கேட்) அனலட்டிக்கல் மற்றும் கணிதம் அதிகம் இடம் பெறுகிறது. இதனால் சில ஆண்டுகளாகவே இன்ஜினியரிங் படித்தவர்களே அதிகளவில் இத்தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்.
மேலும், பி.எஸ்சி., பி.ஏ., படித்தவர்களை விட இன்ஜினியரிங் மாணவிகள் குறைவாகவே கேட் தேர்வு எழுதுகின்றனர்‘ என்று கோழிக்கோடு ஐ.ஐ.எம்., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘கேட் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஐ.ஐ.எம்.,களில் அட்மிஷன் நடைபெறுகிறது. பாலினத்தை பொறுத்து அல்ல‘ என்கின்றனர்.
குறைவான எண்ணிக்கையிலேயே மாணவியர் கேட் தேர்வு எழுதுகின்றனர். என்றபோதிலும், ‘கேட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவியர் நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு அட்மிஷன் பெறுகின்றனர்’ என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

