வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சென்னை வர வேண்டாம்!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சென்னை வர வேண்டாம்!
UPDATED : ஆக 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே பதிவு செய்யலாம். இணைய தளம் மூலமும் புதுப்பிக்கலாம்.
பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரிகள் போன்றோர் வேலைவாய்ப்புக்காக சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு நேரில் வந்து கொண்டுள்ளனர். இதனால் வீண் காலவிரயம் மற்றும் பொருட் செலவு ஏற்படுகிறது.
இந்தக் கல்வித் தகுதி உடையவர்கள் அந்தந்த உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம். பதிவு விவரங்கள் உடனுக்குடன் சென்னையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு பதிவு அட்டை தபால் மூலம் மூலம் அனுப்பி வைக்கப்படும். எந்த மாவட்டத்தில் பதிவு செய்தாலும் சீனியாரிட்டி பாதிக்கப்படாது.
ஏற்கெனவே, சென்னை சாந்தோமில் உள்ள அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்து கொண்டவர்கள், தற்போது கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் அதையும் பதிவு செய்து கொள்ளலாம். புதுப்பிப்பதற்கான கடைசி மாதம் மற்றும் அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டு மாதங்களுக்குள் பதிவை இணைய தளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி: www.employment.tn.gov.in

