அரசு கல்லூரிகளை தரம் உயர்த்த கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
அரசு கல்லூரிகளை தரம் உயர்த்த கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
UPDATED : ஆக 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியை உடனடியாக ஒருமை பல்கலையாக தரம் உயர்த்த வேண்டும் என, கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் தொகுப்பு ஊதியத்தில் வேலை செய்யும் கவுரவ விரிவுரையாளர்கள் 36 பேர் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, அரசு கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு வாயில் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
அரசு கலைக்கல்லூரிகளை ஒருமை பல்கலையாக தரம் உயர்த்த வேண்டும், கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் சிறப்பு ஆசிரியர் தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2007-08ம் கல்வியாண்டில் ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் பணி நியமனத்தை உடனே திரும்ப பெற வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை பணி யு.ஜி.சி.,யின் அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

