கலாமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வழங்கியது!
கலாமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வழங்கியது!
UPDATED : ஆக 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சிங்கப்பூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும் பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.ஆர். நாதன், அப்துல்கலாமுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடைய பரஸ்பரம் உறவுகளை வளர்ப்பதில் ஆற்றிய பணிகளுக்காகவும் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் ஆற்றிய சேவைகளுக்காகவும் கலாமுக்கு பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு விஞ்ஞானியான கலாம் சிறந்த ரோல் மாடல் என்று எஸ்.ஆர். நாதன் புகழாரம் சூட்டினார். சிங்கப்பூரும் குறிப்பாக நான்யாங் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் கலாமின் ஆலோசனைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவைக் காண 1,600க்கு மேற்பட்ட இந்தியர்கள், அதிலும் குறிப்பாக இந்திய மாணவர்கள் வந்திருந்தனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததும், அந்த மாணவர்கள் கலாமை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு ஆட்டோகிராப் வாங்கினார்கள்.

