மனித வளப் பிரிவிலிருந்து விலகிச் செல்லும் எம்.பி.ஏ. மாணவர்கள்
மனித வளப் பிரிவிலிருந்து விலகிச் செல்லும் எம்.பி.ஏ. மாணவர்கள்
UPDATED : ஆக 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற பி ஸ்கூல் நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்து வருபவர்களில் பலரும் எச்.ஆர். எனப்படும் மனித வள மேலாண்மைப் பிரிவை நாடவில்லை.
இவர்களின் முதல் விருப்பமாக இருப்பது நிதியும், மார்க்கெட்டிங்கும் தான். காஜியாபாத்திலுள்ள எம்.ஐ.டியில் மொத்தம் 540 மாணவர்கள் எம்.பி.ஏ.படிக்கின்றனர். இவர்களில் 30 பேர் மட்டும் எச்.ஆர். பிரிவைப் படிக்கின்றனர்.
நொய்டாவிலுள்ள ஐ.ஐ.எம். லக்னோ வளாகத்தில் வெறும் 3 பேர் மட்டுமே இந்தப் பிரிவைப் படிக்கிறார்கள். எச்.ஆர். என்பது பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது என்றே பல மாணவர்களும் நினைப்பதால் இந்த நிலை என கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் எச்.ஆர். பிரிவில் எம்.பி.ஏ. முடித்துப் பணிக்குச் செல்வோரின் சம்பளமானது இரண்டு மடங்காக அதிகரித்தும் கூட இது மாணவர்களைக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

