sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்லடம் மற்றும் அவிநாசியில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

/

பல்லடம் மற்றும் அவிநாசியில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

பல்லடம் மற்றும் அவிநாசியில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

பல்லடம் மற்றும் அவிநாசியில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!


UPDATED : அக் 24, 2014 12:00 AM

ADDED : அக் 24, 2014 05:35 PM

Google News

UPDATED : அக் 24, 2014 12:00 AM ADDED : அக் 24, 2014 05:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவ, மாணவியருக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, நாளை (25ம் தேதி) பல்லடத்திலும், நாளை மறுதினம் (26ம் தேதி) அவிநாசியிலும் நடக்கிறது. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குகின்றனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறை குறித்து, ஆண்டுதோறும் "தினமலர் நாளிதழ் சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; இந்நிகழ்ச்சி, பல்லடத்தில் நாளை (25ம் தேதி) நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில், முக்கியத்துவம் தர வேண்டிய பகுதிகள், முழு மதிப்பெண் பெற உதவும் முக்கிய வினாக்கள், படித்ததை மறக்காமல், நினைவில் வைத்துக்கொள்ளும் வழிமுறை, பயமின்றி தேர்வை எதிர்கொள்ள தேவையான டிப்ஸ், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளும் மனவலிமை என உடல்நலம், மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வல்லுனர்கள் வழங்க உள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் புளூ பிரிண்ட் புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பல்லடத்தில்...: பல்லடம், திருச்சி ரோட்டில் உள்ள வைஸ் திருமண மண்டபத்தில், நாளை (25ம் தேதி) காலை 9.00 மணிக்கு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி நடக்கிறது. கோவை, பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், பாட வாரியாக அதிக மதிப்பெண் பெறுவது குறித்து விளக்குகின்றனர்.

தமிழ் - பாரதி, ஆங்கிலம் - ராதிகா, கணிதம் - ரேவதி, அறிவியல் - பரிமளம், சமூக அறிவியல் - சித்ரா ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு, பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி நடக்கிறது. கோவை, பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தமிழ் - கவியரசன், ஆங்கிலம் - ஜெபகுமார், கணிதம் - விநாயக மூர்த்தி, இயற்பியல் - சசிகுமார், வேதியியல் - ரமேஷ் பிரபு, உயிரியல் - நிர்மலா, கம்ப்யூட்டர் சயின்ஸ் - பிரவிதா, வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் - மாலா, பொருளியல் - சங்கீதா ஆகியோர் பேசுகின்றனர்.

அவிநாசியில் நாளை மறுதினம்: நாளை மறுதினம் (26ம் தேதி), அவிநாசியில் உள்ள சந்திர மஹால் திருமண மண்டபத்தில், காலை 9.00 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவை, பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று, பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற ஆலோசனை வழங்குகின்றனர்.

தமிழ் - கல்பனா, ஆங்கிலம் - சிந்தி, கணிதம் - சரவணன், அறிவியல் - பரிமளம், சமூக அறிவியல் - நித்யா ஆகியோர் பேசுகின்றனர். அதைத்தொடர்ந்து, மதியம் 12.30 மணிக்கு துவங்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தமிழ் - அமிர்தம், ஆங்கிலம் - ஜெபகுமார், இயற்பியல் - ஹேப்பி கணேஷ், வேதியியல் - ரகுவரன், உயிரியல் - சித்ராதேவி, கம்ப்யூட் டர் சயின்ஸ் - கவுசல்யா, வணிகவியல் மற் றும் கணக்கு பதிவியல் - மாலா, பொருளியல் - சங்கீதா ஆகியோர் பேசுகின்றனர்.

இந்நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், புரபஷனல் எஜூகேஷனல் டிரஸ்ட் மற்றும் ஆர்.வி.எஸ்., குரூப் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. மாணவர் கல்வி நலனில் அதிக அக்கறை கொண்ட தினமலர் நாளிதழ், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, இந்நிகழ்ச்சி மூலம் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டுகிறது. உங்கள் ஊரில் நடக்கும் இந்த அரிய நிகழ்ச்சியை தவற விடாமல், மாணவ, மாணவியர் மட்டுமின்றி பெற்றோர், ஆசிரியர்களும் திரளாக பங்கேற்று பயனடைய, தினமலர் நாளிதழ் அன்போடு அழைக்கிறது.

அனுமதி இலவசம்; மாணவ, மாணவியர் பள்ளி சீருடையில் வருவது சிறப்பு; பள்ளி அடையாள அட்டை வைத்திருப்பதும் அவசியம்.






      Dinamalar
      Follow us