தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுடன் சப்-கலெக்டர் கலந்துரையாடல்
தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுடன் சப்-கலெக்டர் கலந்துரையாடல்
UPDATED : அக் 27, 2014 12:00 AM
ADDED : அக் 27, 2014 10:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி கல்வி மாவட்ட அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில், காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடம்பெற்ற மாணவ, மாணவிகளுடன் சப்-கலெக்டர் சமீரன் கலந்துரையாடினார்.
பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரெங்கநாதன், பள்ளித்துணை ஆய்வாளர் லோகமுருகன் முன்னிலை வகித்தனர். சப்கலெக்டர் சமீரன், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கலையூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் சேதுராமு நன்றி கூறினார்.

