இந்திய கல்வி நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கான புதிய திட்டம்!
இந்திய கல்வி நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கான புதிய திட்டம்!
UPDATED : அக் 31, 2014 12:00 AM
ADDED : அக் 31, 2014 02:42 PM
2014ம் ஆண்டின், Depositor Education and Awareness Fund (DEAF) - 2014 என்ற திட்டத்தின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டிலுள்ள பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் உள்ள சேமிப்புகளின் மொத்த தொகை ரூ.3600 கோடிக்கும் மேல். இந்த தொகை முழுவதும் DEAF திட்டத்தில் கொண்டுவரப்படுகிறது.
அதேசமயம், 10 ஆண்டுகளுக்குப் பின்னர், தனது பணத்திற்காக, உரிய நபர்கள் வங்கியை அணுகும்போது, DEAF திட்டத்திலிருந்து, தேவையான நிதியை வங்கிகளால் எடுத்துக்கொள்ள முடியும்.
நிதி பெறுவதற்கான கல்வி நிறுவனங்களை பதிவுசெய்வதற்கான விதிமுறைகள் அடங்கிய ஒரு வரைவு, ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்படும். நிதிபெறக்கூடிய ஒரு கல்வி நிறுவனம், DEAF தொடர்பாக ஏதேனும் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா? என்பதும் ரிசர்வ் வங்கியால் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

